பீஸ்ட் படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

Aparna Doss Role in Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதுவரை இரண்டாவது நாயகியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் அவர் படத்தின் நாயகி இல்லை என தெரிய வந்துள்ளது.

விஜய்க்கு தங்கையாக இந்த படத்தில் நடித்துள்ளார். இடைவேளைக்கு பிறகு படத்தில் அண்ணன்-தங்கை வலுவானதாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக வெளிவந்த படங்களைப் போல இந்தப் படத்திலும் விஜய் அண்ணன் தங்கை சென்டிமென்ட் பக்காவாக கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.