Anushka About Her First Love
காதல் தோல்வி பற்றி முதல் முறையாக பேசியுள்ளார் அனுஷ்கா.

Anushka About Her First Love : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா, பிரம்மாண்ட படங்கள் என்றாலே பல இயக்குனர்களின் தேர்வு அனுஷ்காவா தான் இருக்கும்.

ஆனால் தற்போது உடல் எடை கூடி குண்டாகி விட்டதால் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். நான் கடந்த 2008-ல் ஒருவரை காதலித்தேன்.. அற்புதமான மனிதர் அவர், நல்ல காதல் அது.

அந்த காதலால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டோம், அந்த காதலுக்கு நான் இன்றும் மதிப்பு கொடுக்கறேன். அவரின் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.

தற்போதும் காதலில் இருந்திருந்தால் அவரின் பெயரை கூறியிருப்பேன் என கூறியுள்ளார். மேலும் பிரபாஸை எனக்கு 20 வருடமாக தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

அனுஷ்கா இவ்வாறு கூறியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அந்த நபர் யாராக இருக்கும் என விவாதித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.