தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்களை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆன்ட்டி இந்தியன் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Anti Indian Movie Review : தமிழ் சினிமாவின் திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் ஆன்ட்டி இந்தியன். இந்த படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

படத்தின் கதைக்களம் :

அம்மா இந்து மதத்தை சேர்ந்த தாய்க்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த தகப்பனுக்கும் பிறந்தவர்தான் பாஷா ( ப்ளூ சட்டை மாறன் ). இவர் படத்தில் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். இதனையடுத்து இவரது உடலை முஸ்லீம் முறைப்படி தகனம் செய்ய மசூதிக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல அங்கு அவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து விடுகின்றனர். இந்த நேரத்தில் இடைதேர்தல் வேற நடப்பதால் இவரது மரணத்தை வைத்து அரசியல் நடக்கிறது. கடைசியில் கடைசியில் பாட்சாவின் உடலை எப்படி தகனம் செய்தார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

படம் முழுவதும் நாயகனான ப்ளூ சட்டை மாறன் பிணமாகவே இருப்பது ரசிக்கும் வகையில் இல்லை.

எந்த மதத்தையும் தூக்கிய பேசாமல் தாக்கியும் பேசாமல் இரண்டு மதத்தினருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை வைத்து அரசியல் வாதிகள் எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதை அப்பட்டமாக சொல்லியுள்ளார்கள்.

படத்தை கழுவி உத்ததான் வந்தோம் ஆன? – Anti Indian Public Review

படத்தின் இசை, ஒளிப்பதிவு ஆகியவை வலுவானதாக இல்லை. இவற்றில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.படத்தின் முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் அப்படியே அது குறைய தொடங்கி விடுகிறது.

REVIEW OVERVIEW
ஆண்ட்டி இந்தியன் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
anti-indian-movie-review-tamilமொத்தத்தில் மற்ற படங்களை குறை சொன்ன ப்ளூ சட்டை மாறனின் படம் பெரிய அளவிற்கு பாராட்டும் வகையில் இல்லை என்றாலும் ஒரு முறை பார்க்கலாம்.