லியோவுக்கு போட்டியாக முன்னணி நடிகரின் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இதே தேதியில் லியோவுக்கு போட்டியாக இன்னொரு முன்னணி நடிகரின் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம், சியான் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் தான் லியோவுக்கு போட்டியாக வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஒருவேளை உண்மையாக இருந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.