DNA Combo
மீண்டும் தனுஷுடன் இணைவீர்களா? அது எப்போது நடக்கும் என ரசிகர் கேட்ட கேள்விக்கு அனிருத் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் இசை புயலான அனிருத் தற்போது தர்பார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 64, சிவகார்த்திகேயன் படம் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று மாலை #AskAnirudh என்ற ஹேஸ்டேக் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார், ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் தனுஷுடன் மீண்டும் இணைவீர்களா? எப்போது நடக்கும் என கேட்க கூடிய விரைவில் இணைவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அப்போ DNA கூட்டணியை எதிர்பார்க்குறவங்களுக்கு கூடிய சீக்கிரம் கொண்டாட்டம் இருக்கு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.