
விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
Andrea in Vikram Movie : தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டரில் இடம் பெற்ற ரெட் கோட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி நடிக்கும் ஆன்ட்ரியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி ஆண்ட்ரியாவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆண்ட்ரியா இதற்கு முன்னதாக கமலுடன் இணைந்து விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.