பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிட் வீக்கில் நடைபெற்று உள்ளது. 

Ananya Evicted From Bigg Boss 7 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், விஷ்ணு, நிக்சன், அனன்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

ஓட்டுக்களின் படி அனன்யா மிகக் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருக்க அதற்கு அடுத்த இடத்தில் நிக்சன் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த வாரம் மிட் வீக் எலிமினேஷன் நடைபெற இருப்பதாக பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. 

அதன்படி இன்றைய எபிசோடில் இருந்து அனன்யா வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வார இறுதியில் இன்னொரு எவிக்ஷன் இருக்கும் ஆனால் அதில் நிக்சன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.