நடிகை எமி ஜாக்சன் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மதராசபட்டினம். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் தெறி, தனுஷூடன் தங்கமகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2.0, விக்ரமுடன் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திருமணத்திற்கு முன்னரே காதலருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு பிறகு தன்னுடைய காதலரை பிரிந்தார். இதைத் தொடர்ந்து தற்போது வேறு ஒரு நபருடன் காதலில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய மகனின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் மகன் இந்த அளவுக்கு வளர்ந்துட்டாரா என கமெண்ட் அடித்து வருகின்றனர் ‌‌ ‌‌