புதிய காதலனுடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் மதராதப்பட்டினம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய், தனுஷ் ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் ஒன் படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இவர் ஒருவரை காதலித்து திருமணத்திற்கு முன்னரே ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு பிறகு அவரை பிரேக்கப் செய்தார். 

இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்ட புகைப்படங்களை எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.