விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பிரமோஷனுக்காக இறங்கிய டிரக் வண்டி..!
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ‘Train on Wheels’ என்ற பிரம்மாண்ட விளம்பரப் பயணத்தை படக்குழுவினர் இன்று தொடங்கியுள்ளனர். ரயில் பெட்டியைப் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக விளம்பர வாகனத்தில் படக்குழுவினர் பயணித்து, நகரின் பல்வேறு பகுதிகளில் ‘ட்ரெயின்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக […]