என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வெற்றி.. பரீட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி, இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக நடித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ புகழ் ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு […]