கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’ பட டைட்டில் லுக் வெளியானது
கண்ணன் ரவி குழுமம் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாராகும் புதிய திரைப்படத்தில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில் ரத்தம் தோய்ந்த வேல்கம்பு, […]