“எந்தத் திட்டமும் எனக்கு இல்லை” – வதந்திக்கு பாடகர் வேடன் மறுப்பு
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இசைக் கலைஞர் வேடன் விளக்கம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்க உள்ளதாகவும், இது தொடர்பாக தான் அறிக்கை வெளியிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், இதுபோன்ற எந்த அறிக்கையையும் தான் வெளியிடவில்லை என்றும் வேடன் கூறியுள்ளார். சவூதி அரேபியா மட்டுமின்றி வேறு எந்த வளைகுடா […]