சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் இணையும் ஸ்ருதி ஹாசன்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும் தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘அஸ்வின்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கிய ‘மாவீரன்’, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘3BHK’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம், […]