நவீன் சந்திராவின் ‘என்.சி. 51’ படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் எனத் திரையுலகில் பல்வேறு தளங்களில் பயணித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவுடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்.சி. 51’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆர்.பி. பாலா இயக்குகிறார். ‘லெவன்’ திரைப்படத்தில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த நவீன் சந்திரா, கதாபாத்திரத் தேர்வில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அவரது 51-வது திரைப்படமாக உருவாகும் இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் […]