Browsing tag

Sandiyar

கமல்ஹாசன் பிறந்தநாளில் தொடங்கிய ‘சண்டியர்’ படப்பிடிப்பு!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சண்டியர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 7) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (நவம்பர் 6) இப்படத்தின் தலைப்பான ‘சண்டியர்’ படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்திற்காக கமல்ஹாசன் மேற்கொண்ட லுக் டெஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது படப்பிடிப்பும் […]

பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு – மனம் திறந்த ‘சண்டியர்’ பட இயக்குநர் அருண்குமார்!

நடிகர் கமல்ஹாசன் மீண்டும் ‘சண்டியர்’ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை இயக்கும் இயக்குநர் அருண்குமார் தனது மகிழ்ச்சியை அறிக்கையாகப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அனைத்துப் படைப்புகளிலும் தான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் தாக்கம் இருந்து வந்துள்ளதாகவும், அந்தத் தாக்கங்கள் தனது படைப்புகளை மேலும் செழுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்த எனக்கு, பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று அந்த உன்னத மகா […]