அனைவரும் பார்க்கும்படியான படம் வருமா?: ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்..
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எஜமான்’ படம் ரீ ரிலீஸ் தகவல் தெரிந்ததே. இந்நிலையில், அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள விஷயம் வருமாறு: ‘ரெட் லேபில்’ படத்தில் புதுமுகங்கள் லெனின்-அஸ்வின் ஜோடி ஆகியுள்ளனர். பொன்.பார்த்திபன் கதை எழுத, கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது […]