Browsing tag

raid

பிரபல நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை நாடு முழுவதும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், தமிழகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பல இடங்களில் கடந்த சில வருடங்களாக பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திலும் சோதனையானது நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் விசாகனிடம் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் […]

நடிகர் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஆர்யா, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஆர்யா தற்போது ‘அனந்தன் காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. நடிப்பது மட்டுமின்றி ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ‘அமர காவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘ரெண்டகம்’, ‘கேப்டன்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட […]

இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. டாஸ்மாக் மதுபான விற்பனை விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தியது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்தது. அண்மையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத் […]

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாத்துறை சோதனை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், சினிமா துறையில் தனது பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கியவர். தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விக்னேஷ் சிவனுக்கு உதவியாளராக பணியாற்றியதில் இருந்து அவரது திரைப்பயணம் தொடங்கியது. பின்னர், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘பாவ கதைகள்’, ‘அமரன்’ போன்ற படங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது ‘டான் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ‘ரெய்டு’

‘எம்புரான்’ பட சர்ச்சையை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படம் சர்ச்சைகளிலும் சிக்கி, மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்டு படத்தில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய பதிப்பு திரையரங்குகளில் வெளியானது. எடிட்டிங்கிற்குப் பிறகு, படத்தின் ஆன்லைன் முன்பதிவில் சரிவு ஏற்பட்டாலும், அது […]

‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜுவை தொடர்ந்து, ‘புஷ்பா’ இயக்குனர் சுகுமார் வீட்டிலும் ரெய்டு…

பான் இந்திய படமாக வெளிவந்த புஷ்பா வசூலை வாரிக் குவித்துள்ளது. இச்சூழலில், இன்று இப்பட இயக்குனர் சுகுமாரின் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவல்கள் வருமாறு: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தன்னா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 படம், தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் சுகுமாரின் ஹைதராபாத் வீட்டில் இன்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது […]