“இன்று நான் சாப்பிடும் சோறு அவர் போட்ட பிச்சை!” – தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மறைவால் இயக்குநர் விக்ரமன் கதறல்
தமிழ் சினிமாவின் வெற்றித் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அவர்களின் திடீர் மறைவு, ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இயக்குநர்களை உருவாக்கிய அந்த ‘தாய் மடி’ இன்று இல்லாமல் போனதை எண்ணி, இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. வறுமையில் கைகொடுத்த ‘புது வசந்தம்’ சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராகும் கனவோடு சென்னைக்கு வந்து, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த தனது ஆரம்பகால வாழ்க்கையை விக்ரமன் நினைவு கூர்ந்துள்ளார். […]