Browsing tag

Prakash Raj

பிரகாஷ் ராஜ் நடித்த ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

பிரபல இயக்குநர் ஆர். சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமான பாசம், புரிதலின்மை, எதிர்பார்ப்புகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டார்லிங் கிருஷ்ணா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், படத்தின் உணர்வுப்பூர்வமான களத்தையும் முன்னணி நடிகர்களின் […]

ஜனநாயகன் திரை விமர்சனம்

சிறையில் கைதியாக இருந்தாலும், அந்தச் சிறையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவராக இருக்கிறார் விஜய். அவருக்கு துணையாக செயல்படும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன், உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை சந்தித்து, பின்னர் ஒரு விபத்தில் உயிரிழக்கிறார். தனது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற கௌதம் மேனனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்கிறார். மமிதாவுக்கு கடுமையான பயிற்சிகளை அளித்து ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கும் நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்காவில் […]

“ஜனநாயகன்” ரிலீஸ் எப்போது? விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதற்கிடையில், படம் ஆன்லைனில் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டதும் பேசுபொருளானது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, படத்தின் வெளியீட்டு […]

சூர்யா – ஞானவேல் படத்தைத் தயாரிக்கும் ஹொம்பாலே!

ஹொம்பாலே பிலிம்ஸ் – ‘தி ஒன்’ சூர்யா – இயக்குநர் த.செ. ஞானவேல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ‘S-48’ இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணியாக, ‘தி ஒன்’ சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் ‘S-48’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பேராதரவையும், ரசிகர்களின் அன்பையும் பெற்ற நடிகர் சூர்யா, சமூக அக்கறை கொண்ட வலுவான கதைகளை திரைப்படமாக்குவதில் தனித்துவம் பெற்ற இயக்குநர் […]

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: பிரகாஷ் ராஜுக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு நோட்டீஸ்!

நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணம் மற்றும் இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவருக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சர்ச்சையின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பிரகாஷ் ராஜ், “ராமரும் லட்சுமணரும் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு ஆக்கிரமிப்பு செய்ய வந்தவர்கள்” என்ற தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இவரது இந்தப் பேச்சு இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்ட […]

“நாட்டை நடிகரிடம் கொடுக்க முடியாது”: பழநியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசப் பேச்சு!

பழநி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து நடைபெற்ற இளைஞர் கலை விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் புதிய அரசியல் கட்சிகளின் வரவு குறித்து அவர் காரசாரமாகப் பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் இதோ: தமிழகத்தின் மூன்று ‘மாடல்கள்’ தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல் மூன்று விதமான அரசியல் சித்தாந்தங்களுக்கு இடையிலானப் போட்டி என்று பிரகாஷ் […]