Browsing tag

kantara

காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’

‘காந்தாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகிறது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G. ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அனுபவம் கொண்ட இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். […]

“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!! இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த […]

காந்தாரா-3 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்..

‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இதனையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்துள்ளது. ’காந்தாரா’ படத்துக்கு முன் என்ன நடந்தது என்பதை தான் ‘காந்தாரா 2’ ஆக உருவாக்கி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகம் உருவாக்கும் திட்டமும் வைத்திருக்கிறார். அதில், ‘காந்தாரா’ படத்துக்குப் பின் […]