‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்
பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், குறிப்பிடத்தக்க வெற்றியையும் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி, தமிழ் ரசிகர்களிடையேயும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினர் சென்னையில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தனர். ஏற்கெனவே திரைப்படத்தை பார்த்திருந்த கமல்ஹாசன், படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் வெகுவாக பாராட்டியதுடன், படக்குழுவினரின் முயற்சிகளுக்கும் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், […]