Browsing tag

investigation

நடிகர் சோனுசூட்டுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு: திரையுலகில் பரபரப்பு

சோனுசூட் மீதான பிடிவாரண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா கொடுத்த, ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாக மோஹித் சுக்லா, மற்றும் ரிஜிகா காயின்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலீடு திட்டம் ஒன்றில், பணம் போட்டால் அதிக லாபம் […]

தயாரிப்பாளரின் வீட்டை இடித்த விவகாரம்: நடிகை கவுதமிக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட் நடிகை கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம். நடிகை கவுதமிக்கு எதிராக அழகப்பனின் மனைவி நாச்சாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வருமாறு: ‘நாங்கள் சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் எங்களது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டிருக்கிறது.எங்களது வீட்டை இடித்ததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என கவுதமிக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. […]

ஐஸ்வர்யா ராய் மகள் குறித்து அவதூறு செய்தி: கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்..

நடமாடுற 50 கிலோ எடைகொண்ட தாஜ்மஹால் தான் ஐஸ்வர்யா. இந்த ஸ்லிம்மான பேரழகியின் செல்ல மகள் ஆராத்யா பற்றிய தவறான தகவல்களை நீக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது. நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன் உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் – தந்தையின் […]

ரஜினியின் ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளர் தற்கொலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்டதன் மூலம் பிரபலமான தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி, கோவாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கி இருந்த கே.பி.சவுத்ரி, உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில் தங்கியிருந்த கே.பி. செளத்ரி நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்ட செளத்ரி, பின்னர் சர்தார், கப்பர் சிங், சீதம்மா […]

சம்பந்தப்பட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..

நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் வலைதளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. புகைப்படம் குறித்த உண்மை அறிய சஜக் குழு விசாரணையில் இறங்கியது. கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட தொடர்புடைய கீ […]

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபர்; 24 மணிநேரத்தில் கைது; விசாரணை விவரம்..

பாலிவுட் முன்னணி நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை, மும்பை போலீஸார் துரித நடவடிக்கையில் விரைந்து கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: சயிப் அலிகான், நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர், மும்பையில் பந்த்ராவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ஜனவரி 16-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சயிப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் மிகப்பெரிய […]

முன்னணி நடிகருக்கு மர்மநபர் கத்திக்குத்து, உயிருக்கு போராடும் நிலை; போலீஸ் தீவிர விசாரணை..

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானுக்கு நேர்ந்த கத்துக்குத்து காரணமாக, லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த சம்பவம் வருமாறு: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டில், அதிகாலை வேளையில் கொள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்ததோடு, சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மும்பை பந்த்ரா போலீஸார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில், பல குழுக்கள் அமைத்து தேடி வருகின்றனர். கொள்ளையன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சயிப் […]

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: கைதான தொழிலதிபருக்கு ஜாமீன்..

நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் புகாரில் கைதான தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: மலையாள நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருக்கும் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உருவக்கேலிக்கு எதிராக கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கினை விசாரித்த வந்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘நமது சமூகத்தில் உருவக்கேலி என்பது ஏற்றுக் கொள்ளப்படாதது. ஒருவரின் உடல் […]

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன்..

மன்சூர் அலிகானின் மகன் மீதான வழக்கில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு காண்போம்.. தமிழ்த்திரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான் என்பது தெரிந்ததே. இந்நிலையில், முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் பெயர் இருந்தது. பின்னர், அவருக்கும் […]

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: போலீஸ் விசாரணை..

டிவி சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு: விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் விஜே சித்ரா. இவர், கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி சித்ராவின் உடல் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய […]