லோன் வாங்கி கார் வாங்காதீங்க… மாட்டிக்குவீங்க! – நடிகர் அப்புக்குட்டி அட்வைஸ்!
‘பண்டமாற்று’ குறும்பட விழாவில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, கார் வாங்குவதற்காகக் கடன் பெறுவது மற்றும் வட்டிக்குப் பணம் வாங்குவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “‘பண்டமாற்று’ படத்தின் கதை வட்டிக்குப் பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. நானும் எனது காரை அடமானம் வைத்து அவதிப்பட்டிருக்கிறேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் கிடையாது. 10 சதவீத நடிகர்கள் மட்டுமே வசதியாக இருக்கிறார்கள். […]