மதுரையில்தான் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்! – நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது தீபாவளி கொண்டாட்டம் மற்றும் ‘சேயோன்’ படப்பிடிப்பு குறித்துப் பேசினார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “’சேயோன்’ படப்பிடிப்பிற்காக மதுரை வந்துள்ளோம். அதனால் இந்த ஆண்டு தீபாவளியை மதுரையில்தான் கொண்டாடுகிறோம். மதுரை எப்போதுமே ஸ்பெஷல்தான். மதுரையின் மாப்பிள்ளை என்று சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பில் பங்கேற்று […]