ஜி.வி. பிரகாஷ் குமார் – மாளவிகா மனோஜ் நடிக்கும் அன்புடன் மகி முதல் பார்வை போஸ்டர்கள் வெளியீடு!
லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், ஏற்கனவே அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து உருவாகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் […]