அஜித் சாரின் லெ மான்ஸ் பயணம் இந்திய மோட்டார் விளையாட்டின் வரலாற்றுச் சாதனை – இயக்குநர் விஜய் நெகிழ்ச்சி பதிவு
உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சவாலான மோட்டார் விளையாட்டு போட்டிகளில் ஒன்றான 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) போட்டியை நேரில் கண்டு ரசித்த அனுபவம் குறித்து இயக்குநர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் போட்டியை நேரில் கண்டு, அதை பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. […]