Browsing tag

வாரணாசி

‘வாரணாசி’ மூலம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி..

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோ. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா தெரிவிக்கையில், ‘பாலிவுட்டை விட்டு வெளி​யேற நான் நினைத்​த​தில்​லை. அங்கு பணிபுரிந்​த​போது பல காரணங்​களுக்​காக ஒதுக்​கப்​படு​வ​தாக உணர்ந்​த​தால், என் எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களைத் தேடும் […]

முதல் இந்திய திரைப்படம்; ராஜமௌலியின் ‘வாரணாசி’ புதிய சாதனை..

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை […]

ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தலைப்புக்கு நேர்ந்த சிக்கல்..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு தற்போது‘வாரணாசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு அண்மையில் ‘குளோப்டிரோட்டர்’ என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதனையடுத்து, இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிகழ்வில், அனுமன் குறித்து ராஜமவுலி பேசியது சர்ச்சையாகி, அவர் மீது ஹைதராபாத் காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘வாரணாசி’ படத்துக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. இந்த தலைப்பை […]

இந்தியாவே எங்களைப் பார்த்து பெருமைப்படும்: மகேஷ்பாபு நெகிழ்ச்சி..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இப்படத்துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இதில் மகேஷ் பாபு பேசும்போது, ‘இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் […]

திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடி தமன்னா நடித்த ‘ஒடேலா-2’ பட டீசர் ரிலீஸ்

தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா-2’ திரைப்பட டீசர் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஒடேலா’ கிரைம் திரில்லர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தனர். பெரும்பாலும் வாரணாசியில் படமாக்கப்பட்டது. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் உள்ளன. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் பெற்று, டூப் போடாமலேயே நடித்திருக்கிறார் தமன்னா. தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், […]