மாமனிதர் எம்.ஜி.ஆரை கொண்டாடுவதில் வியப்பில்லை: இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு..
கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறைத் தேரிவிளையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநரும், அதிமுக தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: 1972-ம் ஆண்டு அதிமுகவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்து 1977-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அவர் இருக்கும்வரை முதலமைச்சராக இருந்து மறைந்தார். தமிழகத்தில் திமுகவும், கருணாநிதியும் தலைதூக்க முடியாமல் செய்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. புரட்சித்தலைவர் ஒருநாள், மறைந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்துக்குச் சென்றார். […]