Browsing tag

பிரியங்கா சோப்ரா

தளபதி விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா..!

தளபதி விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

‘வாரணாசி’ மூலம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி..

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோ. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா தெரிவிக்கையில், ‘பாலிவுட்டை விட்டு வெளி​யேற நான் நினைத்​த​தில்​லை. அங்கு பணிபுரிந்​த​போது பல காரணங்​களுக்​காக ஒதுக்​கப்​படு​வ​தாக உணர்ந்​த​தால், என் எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களைத் தேடும் […]

அதிக பவுன்சர்களுடன் வர காரணம் என்ன?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இப்படத்தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றார். இப்​படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் பிரி​யங்கா சோப்​ரா தற்போது அதிக பவுன்​சர்​களு​டன் வெளி​யில் வரு​கிறார். சமீபத்​தில் கோல்​டன் குளோப் விருதுக்​குச் சென்ற போதும் ஏராள​மான பவுன்​சர்​களு​டன் வந்​தார். ஏன் இந்த திடீர் மாற்​றம் என்​பது பற்றித் தெரிவிக்கையில், ‘யா​ராவது என்னை அணுகி […]

முதல் இந்திய திரைப்படம்; ராஜமௌலியின் ‘வாரணாசி’ புதிய சாதனை..

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை […]

ராஜமவுலி இயக்கும் படத்தில், பிரியங்கா சோப்ராவின் லுக் வெளியீடு..

இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில், நாயகியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அவர் மண்டாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து இந்திய படங்களுக்கு பிரியங்கா சோப்ரா திரும்பியிருப்பதால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவுக்காக […]

ராஜமவுலி இயக்கும் படத்திற்காக, ரூ.50 கோடியில் வாரணாசி செட்

இந்திய அளவில் கவனம் ஈர்த்த ராஜமவுலியின் அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. ‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். […]