ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்..
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலாதரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தில் இருந்து வெளியான ‘ஏத்து’ வீடியோ பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் பிரபுதேவா கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி ரசிக்க வைத்துள்ளார். இப்பாடல் வெளியான 2 வாரங்களிலேயே யூடியூப்பில் 11 மில்லியன் […]