இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா?: பார்த்திபன் சூடான கேள்வி..
பார்த்திபன் தற்போது ‘நான் தான் சிஎம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த ஷார்ட்ஸை 11 ஆயிரம் பேர் லைக் செய்தது தான் வேதனை. 400-க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அந்த செய்தி பார்த்திபனுக்கு தெரியவர யூடியூப் சேனல் லிங்க்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாக தன் ஸ்டைலில் தெரிவித்துள்ளார். […]