ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி..
ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ரஜினியின் 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை […]