Browsing tag

கங்குவா படம்

சினிமாவை விட, நிஜ வாழ்க்கையில் அருமையாக நடிக்கிறார்கள்: சூர்யா-ஜோதிகா பற்றி இணையதள கருத்துகள்

‘கங்குவா’ படத்தின் தோல்விக்கு பிறகு, சூர்யா-ஜோதிகா நட்சத்திர தம்பதிகள் தற்போது கோயில் கோயிலாக சென்று வழிபாடு செய்வது குறித்து, இணைதளவாசிகள் வெளியிடும் கருத்துகள் வைரலாகி வருகின்றன. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘நடிகை ஜோதிகா, ‘இந்து கோயில்களுக்கு செலவு செய்யும் பணத்தை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம்’ என சொன்னது தான் இந்த சர்ச்சைக்கே காரணம் என பஞ்சாயத்து கிளம்பிய நிலையில் தான், அவர் கோயிலுக்கு சென்று கொண்டிருக்கிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன் ஒருவர் எழுப்பினார். அதனை […]

ஒரு மனநோயாளிதான் இப்படி எல்லாம் பேசுவார்: பாடகி சுசித்ரா பற்றி பயில்வான்..

ஜோதிகாவை பற்றி மிக இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட பாடகி சுசித்ராவை, பயில்வான் ரங்கநாதன் விளாசியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: கங்குவா படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனம் குறித்து ஜோதிகா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா ரசிகையா எழுதுகிறேன். முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருக்கிறது. மொத்த 3 மணி நேரமும் அப்படி இல்லை. கேமரா வேலைப்பாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருக்கிறது’ என கூறியிருந்தார். இதுகுறித்து […]

கங்குவா படத்திற்கு பாதிப்பு?: வரும் 22-ந்தேதி 6 படங்கள் ரிலீஸ்: முழு விவரம்..

வருகிற 22 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.. ஜாலியோ ஜிம்கானா: நடிகர் பிரபுதேவா நடிப்பில், நவம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று ‘ஜாலியோ ஜம்கானா’. இயக்குனர் எஸ்.ஜே.சீனு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க, கிங்ஸ்லி, அபிராமி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவா […]

பறவை படும் பாடு: ஆம், ‘கங்குவா’ வரும் நாளில் ‘பீனிக்ஸ்’ வராது..

அந்த ‘கங்குவா’ பறவை வரும் நாளில், இந்த பீனிக்ஸ் பறக்காதாம். அதாவது விஷயம் என்னன்னா.. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஃபீனிக்ஸ் வீழான். இப்படம், நவம்பர் 14-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, படத்தை விளம்பரம் செய்யும் வகையில் பேட்டிகள் கொடுத்து வந்தார் சூர்யா சேதுபதி. இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் கங்குவா எனும் பிரம்மாண்டமான படம் ரிலீஸாகும் அதே நாளில், […]

ஜோதிகா, என்னை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்கினார்: தீரா காதலுடன் சூர்யா ஸ்பீச்..

இந்திய அளவில் செல்லும் இடமெல்லாம் தற்போது, ஜோதிகா புராணம் பாடி வருகிறார் சூர்யா. இது குறித்த காதல் சமாச்சாரம் பார்ப்போம்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கங்குவா படம் வரும் வியாழக்கிழமை அதாவது 14-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், கங்குவா படத்தை பல்வேறு மாநிலங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சூர்யா. அப்படியான சூழ்நிலையில், செல்லும் இடமெல்லாம் தன் காதல் மனைவி ஜோதிகா பற்றியே பேசி வருகிறார் சூர்யா. […]