யாரையும் புண்படுத்த ஒருபோதும் நினைத்ததில்லை: ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்
இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினிமா துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு குறைந்தது. வேலையைத் தேடி நான் செல்வதில்லை. வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். எனது நேர்மையான பணியால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்றார். […]