ராமர் கெட்அப்பில் மகேஷ்பாபுவை பார்த்து வியந்துபோனேன்: ராஜமவுலி வாய்ஸ்..
‘பாகுபலி’ ஆர்.ஆர்.ஆர். படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது தெரிந்ததே. தற்போது மகேஷ்பாபுவுடன் இணைந்து உருவாகும்’ படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில், காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். […]