மணிரத்னத்துக்கே பாடம் எடுக்கிறார்கள்: பிரபல இயக்குனர் ஆவேசம்
‘தக் லைஃப்’ பட விமர்சனங்கள் தொடர்பாக, மணிரத்னத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ‘8 வசந்தலு’ என்ற தெலுங்குப் பட இயக்குனர் பனிந்திரா நார்செட்டி. அவர் தெரிவிக்கையில், ‘தங்கள் கருத்தை தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அடுத்தவர்களை விமர்சிக்க நமக்கு தகுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ‘தக் லைஃப்’ படம் ரிலீஸான பிறகு படம் எப்படி இயக்க வேண்டும் என மணிரத்னம் சாருக்கே மக்கள் பாடம் எடுக்கிறார்கள். 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் லெஜண்டான இயக்குநர் […]