‘ஆட்டி’ படத்தின் கதை பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்
மேதகு-பாகம் 1, சல்லியர்கள் ஆகிய படங்களைத் தொடர்ந்து தி.கிட்டு இயக்கியுள்ள படம், ‘ஆட்டி’. லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சவுந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 24-ந்தேதி வெளியாகிறது. படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது, ‘இது பீரியட் கதையை கொண்ட படம். கொஞ்சம் வரலாற்றுப் பின்னணியிலும் இதன் கதை இருக்கும். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறோம். […]