அச்சம் தருகின்ற விமானப் பயணம்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘திடுக்’ பதிவு
குஜராத் விமான விபத்தைத் தொடர்ந்து, விமானப் பயணம் மற்றும் விபத்து குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்டுள்ளதாவது: FLIGHT FRIGHT! விமான விபத்து கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் செய்திதான். ஏனென்றால், அந்த காலம் போல அல்லாமல் இன்று எல்லோருமே பறக்கிறோம். பறக்கிற எல்லோருமே நம் விமானத்துக்கு ஒன்றும் ஆகாது என்கிற வழக்கமான மனித நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் பறக்கிறோம். இதற்குப் பயந்து விமானப் பயணங்களையே தவிர்க்கிற பலரையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். […]