ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்..
நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து சி.பி.சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என்கிறார்கள். இதையடுத்து ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். ரஜினி காந்தின் 174-வது படமான இது, கமல்ஹாசனுக்கு 238-வது படம். இது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. […]