தூய்மை பணியாளர் பத்மாவுக்கு ரஜினி தங்கச்சங்கிலி பரிசு: வைரலாகும் நிகழ்வு..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சென்னையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர், தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது குப்பையில் 45 பவுன் தங்க நகை கிடந்ததை அவர் பார்த்தார். உடனடியாக அதை எடுத்து வைத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தை கொண்டிருக்காமல், […]