Browsing tag

தவெக மாநாடு

குடும்பமாக, கூட்டணியாக சேர்ந்து கொள்ளையடிக்க வந்த கூட்டம் அல்ல: தவெக மாநாட்டில் விஜய் ஆவேசம்..

தவெக மாநாட்டில் விஜய் ஆவேசமாக பேசினார். அதன் விவரம் வருமாறு: ‘ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பின்வாங்கும் எண்ணம் இல்லை. நோ லுக்கிங் பேக்’ என்று விஜய் தெரிவித்தார். ‘குடும்பமாக, கூட்டணியாக சேர்ந்து கொள்ளையடிக்க வந்த கூட்டம் அல்ல. சமூகத்திற்காக வாளேந்தி நிற்கும் கூட்டம் நாம்’ . பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக. ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த […]

தமிழகத்தில் ஆளுநர் பதவி தேவையில்லை: விஜய்யின் தவெக மாநாட்டில் தீர்மானம்..

சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு, தனியார் துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கொள்கை விளக்க பாடல் ஒலிபரப்பப்பட்டது. மேலும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் கொள்கைகள் வாசிக்கப்பட்டது. ஆனால் இந்த கொள்கைகளை தலைவர் விஜய் வாசிக்கவில்லை. அவருக்கு பதிலாக கட்சியின் […]

தளபதி விஜய்யின் தவெக மாநாடு: இதோ, பரபரப்பான சில நிகழ்வுகள்

தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிபோதையில் வந்தால் உள்ளே அனுமதிக்கக்கூடாது என நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று லீவு விடப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகளை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகமே உத்தரவு பிறப்பித்துள்ளது. * மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிப்பதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி தவெக […]