அனைத்து மக்களையும் அமீரகம் அரவணைக்கிறது: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு..
ஏழு தேசிய விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்நிலையில், அமீரக தேசிய தினம் நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமீரகத்திற்காக இசையமைத்த ‘ஜமால் அல் இத்திகாத்’ என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது. அமீரகத்தின் நிறுவன தந்தை என போற்றப்படும் […]