‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ் ‘( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ் ‘ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் […]

கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில், “கலியுகம்” திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!! போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “கலியுகம்” திரைப்படம், மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!! முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & […]

ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன்..!

ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளார் விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் மேனேஜர் ஆன ஹரிகிருஷ்ணன் அவர்கள் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து ஈஸ்டர் ஞயிறு நன்னாளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை மறைந்து அனைவரிடமும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம் வளரட்டும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். #HappyEaster #ஈஸ்டர் […]

குட் பேட் அக்லி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் இதோ..!

இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது. பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை,அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் ஒன்றாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருந்த நிலையில் […]