அல்லு அர்ஜுனின் புதிய மைல்கல் சாதனை!

தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஷோஸ்டாப்பர்ஸ் 2026’ சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அவரது திரைப்பயணத்தில், இந்த அங்கீகாரம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா ரசிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான அங்கீகாரம் என அல்லு அர்ஜுன், பிராந்திய சினிமாவின் எல்லைகளை கடந்து இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கு திரையுலகில் […]

திருமணத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்த நடிகை மஞ்சிமா மோகன்

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’, ‘சுழல் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் மஞ்சிமா மோகன், தற்போது தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். உடல் எடையை கணிசமாகக் குறைத்து, ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. […]