பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர்கள் ரவி மோகன் & ஜீ. வி.பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் டீசர் தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் – ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு […]

திரையரங்க உரிமையாளர்களுக்கு, விஷால் வேண்டுகோள்..

திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இதன் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசும்போது, ‘பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால், அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்புதான் காரணம். இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், சுராஜ் […]

நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ‘ புரொடக்சன் நம்பர் ஒன்’ படத்தின் பூஜை – படப்பிடிப்பு தொடக்கம் குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் […]

கீர்த்தி சுரேஷ் அப்செட் ஆனால் இதைத்தான் செய்வாராம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

அப்செட் ஆனால் இதைத்தான் செய்வேன் என கீர்த்தி சுரேஷ் பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் பேபி ஜான் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நான் தனது நீண்ட நாள் கணவரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். அதாவது அப்செட் […]

மீண்டும் பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் புதிய படம்..

ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ திரைப்படம் தொடங்கி, பல படங்களில் இணைந்து நடித்தனர். பிரபுதேவா – வடிவேலு. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். வடிவேலு கேட்டார் என்பதற்காக ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல வருடங்கள் கழித்து பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ள இப்படத்துக்கு […]

சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட தியேட்டர்கள் வேண்டும்: இயக்குநர் வி.சேகர் பேச்சு..

சின்ன பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி குடும்பங்களை ஈர்த்தவர் வி.சேகர். இந்நிலையில், தற்போது அவர் தெரிவித்துள்ள ஆதங்கம் பற்றிக் காண்போம்.. எம்.நாகரத்தினம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படம் ‘வள்ளி மலை வேலன்.’ இப்படத்தில் இலக்கியா, ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை என பலர் நடித்துள்ளனர். எம். என்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில், நாகரத்தினம் தயாரித்துள்ளார். எஸ்.மோகன் இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.சேகர் பேசும்போது, ‘இந்தப்படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள். இப்போது முருகன்தான் சீசன் […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து இணையவெளியில் பல தகவல்கள் வெளியாகின்றன. முன்னதாக, ‘கூலி’ என தலைப்பு வைப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் கை நிறைய வாட்ச்சுகளை வைத்துக் கொண்டு வில்லத்தனமாக சிரித்த முகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டது தெரிந்ததே. அந்த போஸ்டரில் தங்க வாட்ச்சுகள் இடம் பெற்றிருக்கும். அதன் பின்னணி என்ன? அதாவது, வின்டேஜ் தங்க வாட்ச்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் […]

நடிகை ரன்யாவுக்கு, மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 14.2 […]

ரஜினியின் ‘பாட்ஷா’ திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாட்ஷா திரைபடம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில், புதிய பொலிவுடன் ‘பாட்ஷா’ ரீ ரிலீஸ் ஆவுள்ளது. முன்னதாக, இப்படம் 2017 ஆம் ஆண்டு மறு வெளியீடு செய்யப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாட்ஷா திரைப்படம் 100 திரையரங்குகளுக்கு […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மூன்று படங்கள்..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மூன்று படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை ரசிகர்கள் OTT இல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் OTTயில் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் ஜூலை 19ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது இந்த படத்தில் அதர்வா நிஷா சஜயன் போன்ற பல […]