‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்ன?: ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ஸ்..
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இதனை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ’மதராஸி’ படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்ஷன் காட்சிகளும் இருக்கவேண்டும் என விரும்பினேன். […]