KUMKI 2 Official Trailer
KUMKI 2 Official Trailer , Prabu S , Mathi , NivasK Prasanna , Dr Jayantilal Gada , Pen Studios
KUMKI 2 Official Trailer , Prabu S , Mathi , NivasK Prasanna , Dr Jayantilal Gada , Pen Studios
எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது ! பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”. நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் […]
நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை நிகழ்த்தி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர் விவகாரம் குறித்து அஜித்குமார் தெரிவித்த பேட்டி வைரலானது. அஜித் கூறுகையில்,’ ‘கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதனிடையில் ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் நெல்சனுக்கு கிடைத்துள்ளதாகவும், அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் படம் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ‘தலைவர் […]
விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் […]
இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ‘கேங்ஸ்டர்’ கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களை கவராமல் போனது. இதையடுத்து, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. […]
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா உள்பட பலர் நடித்துள்ள ‘ஆர்யன்’ படத்தை பிரவீன் கே. இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷ்ணு விஷால் கூறும்போது, ‘ஆர்யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். தாமதம் காரணமாகப் படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்க முடிந்தது. இயக்குநர் பிரவீன் ஒரு புதுமையான, துணிச்சலான படத்தை உருவாக்கியுள்ளார். […]
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெய்ன்’ என்பது தெரிந்ததே. இவ்வகையில் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். டிரான்ஸ் இந்தியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நீலா […]
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ முதல் பாடல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து ‘ஜனநாயகன்’ படத்துடைய முதல் பாடல் நாளை சனிக்கிழமை 8-ந்தேதி தேதி முதல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையில், இப்படத்துடைய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் மக்களுக்கு இடையில் முறுக்கு மீசை மற்றும் கண்ணாடியுடன் மிரட்டலான லுக்கில் விஜய் […]
புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான நிகழ்வில் நிருபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய கவுரி […]