ஜனநாயகன், பராசக்தி படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..

ஜனநாயகன், பராசக்தி இவ்விரு படங்களும் அரசியல் ரீதியான களம் கொண்ட கதைகள். இப்படங்களின் தற்போதைய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறுகளை மையமாக வைத்து ‘பராசக்தி’ என்ற படம் உருவாக்கி வருகிறார் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கிறது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, […]

தேர்தலுக்கு பிறகு, விஜய் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளாரா?

ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்தது தெரிந்ததே. இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு படங்களில் நடிப்பதற்காக விஜய் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாரா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவிக்கையில், ‘விஜய்க்கு அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லை. அவரின் முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது. இது வெறும் வதந்தி’ என்றார். இருப்பினும், விஜய் ரசிகர்களுக்கு அவர் மீண்டும் படங்களில் […]

‘தலைவர்-173’ படம்: ரஜினிக்காக சுந்தர்.சி செய்த மாற்றம்..

ரஜினி, கமல், சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் ‘தலைவர்-173’ படம் குறித்துப் பார்ப்போம்.. சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கான ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. முன்னதாக, இப்படத்தை முடித்ததும் விஷால் நடிப்பில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இவர்களது காம்போவில் உருவான ‘மதகதராஜா’ பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், நான்காவது முறையாக இணைந்தனர். இந்நிலையில், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பினை எதிர்பாராது பெற்றார். […]

இதெல்லாம் கொடுமையானது: யூடியூபர் மீது நடிகை கவுரி கிஷன் பாய்ச்சல்..

விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, தனது உடல் எடை என்ன? என அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. கவுரிக்கு ஆதரவாக இயக்குநர் பா.ரஞ்சித் உள்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் […]

சைபர் கிரைமில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகார்: நடந்தது என்ன?

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கும், பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில் இவர், தனது மார்பிங் புகைப்படங்களைப் போலி வலைதள கணக்கு மூலம் பரப்பி வந்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சில நாட்களுக்கு முன்பு என் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, அதில் என்னைப் பற்றியும், என் குடும்பம் , நண்பர்கள், சக […]

‘மிடில் கிளாஸ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

அண்மையில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி, தேசிங்கு ராஜா-2, அம்பி ஆகிய படங்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டவை. இதில், சசிகுமார்-சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்றது. அவ்வகையில், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்து வெளியாகவுள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. முனீஷ்க்கு விஜயலட்சுமி மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தில், காளி வெங்கட், ராதாரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற […]

ரவிக்கை அணியாமல் சுருட்டு புகைத்தேன்: கீதா கைலாசத்தின் படப்பிடிப்பு அனுபவம்..

நாவலை திரைப்படமாக எடுப்பதும் அரிய கலையே. அவ்வகையில், எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய நூலான ‘வாடிவாசல்’ கதையை படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுள்ளார். இந்த கதையில் சூர்யா நாயகனாகவும் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளுடன் மட்டுமே தற்போதைய நிலையில் உள்ளது. இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமா ஆகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், […]

பார்வதி மற்றும் விக்ரம் இடையே உருவான பிரச்சனை.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் பார்வதி குரூப் ஓட குரூப்பா சேர்ந்துக்கிட்டு என்னோட நியாயத்தை கேட்க வராதீங்க என்று விக்ரமிடம் சொல்லுகிறார். வளர்ப்பு பத்தி ஏன் […]

சூர்யாவை பார்க்க தவிக்கும் நந்தினி, அசிங்கப்படுத்திய சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாதவி இடம் பிசினஸ் மீட்டிங்கு சூர்யா போக வேண்டியது அந்த மீட்டிங்கை நீ போய் அட்டென்ட் பண்ணிட்டு வா என்று சொல்ல மாதவி […]

ஆண்பாவம் பொல்லாதது..11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]