வாந்தி எடுத்துக்காட்டி போட்டியாளர்களை திட்டிய விஜய் சேதுபதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி, வாட்டர் மெலன் ஸ்டார், கனி, எஃப்.ஜே ஆகியோரின் நிற்க வைத்து விஜய் சேதுபதி ஒரு ஒருத்தரின் பெயரை சொல்லி வாந்தி எடுப்பது போல […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட கிளைமாக்ஸ் முடிந்ததும் ‘பிரியாவிடை’ சீன்ஸ்?

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் அடுத்த ‘சிங்கிள்’ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல்-சேட்டிலைட் உரிமைகள் பெரிய அளவில் விற்பனையாகி உள்ளன. தற்போது இப்படத்தின் வெளியீடு தொடர்பாக, தமிழக வியாபார உரிமைக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ கிளைமாக்ஸ் காட்சி குறித்து […]

28-ந்தேதி ரிலீஸாகும் தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’: டிரெய்லர் எப்படி?

பன்முகத்திறமை கொண்ட நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இவர், கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவ்வகையில் ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வருகிறார். நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி […]

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் ஸ்ரீலீலா..

‘பராசக்தி’ படத்திற்கு பிறகு, எஸ்கே நடிக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 14-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக வருகிறார். மேலும் அதர்வா, பாசில் ஜோசப் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’பராசக்தி’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க […]

நிறைய நடிகர்கள் இப்படியொரு கதாபாத்திரத்தை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா ஆதங்கம்..

‘பிளடி பெக்கர்’ என்ற படத்தை தொடர்ந்து ‘மாஸ்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திம் ஏற்றுள்ளார். இப்படம், வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. தற்போது, இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் அனைத்து பணிகளுமே இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்றுள்ளது. இப்படத்துக்காக படக்குழுவினர் அனைவரும் இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளனர். அதில் ‘வடசென்னை’ படத்தின் ‘சந்திரா’ கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. அப்பேட்டியில், ‘வடசென்னை’ படத்தின் சந்திரா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு எந்தவொரு பட வாய்ப்பும் […]

மகிழ் திருமேனி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முன்னதாக, தடையறத் தாக்க, மீகாமன், தடம், உள்பட பல த்ரில்லர் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் மகிழ். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பிறகு, மீண்டும் தனது பாணியில் ஒரு த்ரில்லர் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தை மிராக்கிள் மூவிஸ் என்ற மும்பை நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக ஷ்ரத்தா கபூர், […]

‘மனுஷி’ திரைப்படத்தை நீதிபதி பார்த்தார்: வெற்றிமாறன் தகவல்..

நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகி வரவேற்பு பெற்றார் கோபி நயினார். இதனையடுத்து, இவரது இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான இப்படம் தணிக்கையில் சிக்கியது. இது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வெற்றிமாறன். இதனால் நீதிபதிக்கு தனியாக ‘மனுஷி’ திரையிடல் நடைபெற்றது. தற்போது, இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதை வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘இந்திய […]

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அதனை தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சிபிச் […]

அரசன் படத்தை இசையமைக்க அனிருத் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அரசன் படத்தை இசையமைக்க அனிருத் வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பது இதுவே […]

முத்து செய்த விஷயம், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து ரோகிணி குடும்பத்தினரை வீட்டுக்கு அழைத்து வர ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி அம்மா கிரிஷ் மற்றும் மகேஸ்வரி மூவரையும் வீட்டுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார். வீட்டில் கிச்சனில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ருதி வீட்டில் நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டு வந்து கிச்சனுக்கு வருகிறார் அப்போது மீனா அப்பளத்தை கரிச்சி எடுக்க உங்களுக்கு […]